செய்திகள்

கணவர் மர்ம மரணம்- போலீசாரை கண்டித்து வி‌ஷம் குடித்த திருநங்கை

Published On 2018-09-28 17:49 IST   |   Update On 2018-09-28 17:49:00 IST
மர்மமாக இறந்த தனது கணவர் சாவு குறித்து முறையாக விசாரணை நடத்தாததால் திருநங்கை வி‌ஷம் குடித்தார்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகே உள்ள பழைய செம்பட்டியைச் சேர்ந்த திருநங்கை ஜீவாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவரும் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர்.

கடந்த 25-ந் தேதி ஸ்டீபன்ராஜ் மர்மமான முறையில் இறந்து விட்டார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கருதிய ஜீவா இது குறித்து செம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் வழக்குபதிவு செய்யாமல் அவரை அங்கிருந்து அனுப்பி விட்டனர்.

ஸ்டீபன்ராஜ் கொலை வழக்கை போலீசார் மறைப்பதாக ஜீவா குற்றம்சாட்டினார். இதனால் அவரது கல்லறை முன்பு வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார். அதற்கு முன்பாக எனது கணவர் கொலை குறித்து புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால்தான் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். நான் இறந்தவுடன் என் உடலை ஸ்டீபன்ராஜ் சமாதி அருகே புதைத்து விடவும் என கடிதம் எழுதி வைத்திருந்தார்.

மயங்கிய நிலையில் கிடந்த ஜீவாவை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News