செய்திகள்

இரு சக்கர வாகனத்துடன் 2 ஹெல்மெட் விற்பதை கட்டாயமாக்க வேண்டும்- சரத்குமார்

Published On 2018-09-26 12:42 IST   |   Update On 2018-09-26 12:42:00 IST
இருசக்கர வாகன விற்பனையில் 2 ஹெல்மெட் மற்றும் மற்ற பாதுகாப்பு உபகரணங்களும் கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்று சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Helmet #sarathkumar
சென்னை:

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இன்றைய இளைஞர்களும், மாணவர்களும் ஹெல்மெட்டினை தனது உயிர் காக்கும் நண்பனாக கருதவேண்டும். பெண்கள் பின்னே அமர்ந்து செல்லும் போது, அவசியம் ஹெல்மெட் அணியவேண்டும். என்னுடைய அனுபவத்தில் பெங்களூரில் வசித்த காலத்தின் போது, ஒரு முறை 80, 90 கி.மீ. வேகத்தில் சென்று காரின் பின்புறம் மோதி காருக்கு முன்புறம் தூக்கியெறியப்பட்டேன். அந்த சமயம் என் உயிரை காப்பாற்றியது ஹெல்மெட்தான்.

எப்படி கார் தயாரிக்கும் போதே இருக்கைக்கான சீட்பெல்ட்டுடன் அமைக்கப்படுகிறதோ, அது போல இருசக்கர வாகன விற்பனையிலும் இரண்டு ஹெல்மெட் மற்றும் மற்ற பாதுகாப்பு உபகரணங்களும் கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார். #Helmet #sarathkumar
Tags:    

Similar News