செய்திகள்

நீர்பிடிப்பில் சாரல் மழை - பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2018-09-21 05:12 GMT   |   Update On 2018-09-21 05:12 GMT
நீர்பிடிப்பு பகுதியில் சாரல் மழை பெய்ததால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. #PeriyarDam
கூடலூர்:

முல்லைப்பெரியாறு அணையில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்தது. எனவே அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது.

மேலும் மழை குறைந்ததால் நீர்வரத்தும் குறைய தொடங்கியது. தற்போது அணையின் நீர்மட்டம் 126.25 அடியாக உள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1200 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

நீர்பிடிப்பு பகுதியில் சாரல் மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து 594 கனஅடியாக உயர்ந்துள்ளது. வைகை அணை நீர்மட்டம் 58.89 அடியாக உள்ளது. அணைக்கு 1081 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீருக்காக 1590 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.55 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 115.29 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

பெரியாறு 17, தேக்கடி, 11.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. #PeriyarDam

Tags:    

Similar News