செய்திகள்

எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தில் 6 மருத்துவ படிப்புகள் அறிமுகம்

Published On 2018-09-17 09:44 GMT   |   Update On 2018-09-17 09:44 GMT
தமிழ்நாடு டாக்டர் எம். ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகத்தில் 6 மருத்துவ படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #MGRUniversity
சென்னை:

தமிழ்நாடு டாக்டர் எம். ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகத்தில் பரவு நோயியல் துறையில் நடத்தப்படும் 6 மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு 2018-19ம் ஆண்டுக்கான சேர்க்கை தொடங்கியுள்ளது.

பரவு நோயியல் துறையில் மருத்துவம் சார்ந்த 3 பட்ட மேற்படிப்புகளும், நான்கு பிரிவுகளில் முனைவருக்கான ஆராய்ச்சி படிப்புகளும் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு முதல் சுகாதார மேம்பாடு மற்றும் கல்வி, பொது சுகாதார இதழியியல் ஆகிய இரண்டு முதுநிலை பட்டப்படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

பொது சுகாதாரம், பரவு நோயியல், உயிர் புள்ளியல் ஆகிய பிரிவுகளில் பட்ட மேற்படிப்புகள் நடத்தப்படுகின்றன. மேலும் பொது சுகாதாரம், சமூக மருத்துவம், பரவு நோயியல், உயிர் புள்ளியியல் ஆகிய 4 பிரிவுகளில் முனைவர் பட்டப்படிப்பு சார்ந்த ஆய்வுகளும் வழங்கப்படுகின்றன.

தகுதிகால அட்டவணை விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்களை பல்கலைக்கழக இணைய தளத்தின் (www.tnmgrmn.ac.in) மூலம் தெரிந்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பல்கலைக்கழகத்தை வந்து சேர அடுத்த மாதம் 15-ந்தேதி கடைசி நாளாகும் என்று பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #MGRUniversity
Tags:    

Similar News