செய்திகள்

ஊட்டியில் பலத்த மழை- மார்க்கெட்டுக்குள் தண்ணீர் புகுந்தது

Published On 2018-09-13 20:04 IST   |   Update On 2018-09-13 20:04:00 IST
ஊட்டியில் பலத்த மழை பெய்தது. இதனால் மார்க்கெட்டுக்குள் தண்ணீர் புகுந்தது.

காந்தல்:

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த ஒரு வாரமாக வெயில் அடித்து வந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் திடீரென பலத்த மழை பெய்ய தொடங்கியது.

இந்த மழை மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை இரண்டரை மணி நேரம் நீடித்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. மழை காரணமாக ஊட்டி நகராட்சி காய்கறி மார்க்கெட்டுக்குள் தண்ணீர் புகுந்தது. அதனை வெளியேற்றும் பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். 

ஊட்டி மட்டுமின்றி அதனை சுற்று வட்டார பகுதிகளான காந்தல் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.

Tags:    

Similar News