செய்திகள்
இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அ.தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இன்று நினைவு தினம்: இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அரசியல் கட்சியினர் மரியாதை

Published On 2018-09-11 11:49 IST   |   Update On 2018-09-11 11:49:00 IST
இமானுவேல் சேகரன் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதையடுத்து பரமக்குடியில் அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். #ImmanuvelSekaran
பரமக்குடி:

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் இன்று இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அங்கு குருபூஜை விழா நடந்தது.

காலை முதலே போலீசார் ஒதுக்கிய நேரத்தில் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர்.

அ.தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் ராஜலட்சுமி, மணிகண்டன் ஆகியோர் இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதில் அன்வர்ராஜா எம்.பி., மாவட்டச் செயலா ளர் எம்.ஏ. முனியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.



இதே போல் தி.மு.க. சார்பில் மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன், சுப.த. திவாகர் மற்றும் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் குணா தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

காங்கிரஸ், தே.மு.தி.க., விடுதலைச்சிறுத்தைகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர்.

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பரமக்குடி மற்றும் முக்கிய பகுதிகளில் 6,000-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அஞ்சலி செலுத்த வந்தவர்களின் வாகனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. #ImmanuvelSekaran

Tags:    

Similar News