பெரம்பலூரில் பாலியல் துன்புறுத்தல்- பள்ளி மாணவர்கள் 3 பேர் போக்சோ சட்டத்தில் கைது
பெரம்பலூர்:
பெரம்பலூர் துறைமங் கலம் அவ்வையார் தெருவை சேர்ந்த அருண் (14), பெரம்பலூர் ஆலம்பாடி சாலை சமத்துவபுரத்தை சேர்ந்தவர் அபிஷேக் (15), வெங்கடேச புரம் காலனியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (16), ஆலம்பாடி சாலை அன்புநகரை சேர்ந்தவர் தினேஷ் குமார் (15), துறைமங்கலம் கே.கே.நகரை சேர்ந்தவர் சஞ்சய் ரோஷன் (14). இந்த 5 பேரும் பெரம்பலூரில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பில் ஒரே பிரிவில் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அபிஷேக், தமிழ்ச்செல்வன், தினேஷ்குமார், சஞ்சய் ரோசன் ஆகியே 4 பேரும் சேர்ந்து மிரட்டி அருண் என்ற மாணவரை பள்ளி விளையாட்டு மைதனாத்தில் வைத்து பாலியல் துன்புறுத்தியுள்ளனர்.
இதே போல் தினமும் துன்புறுத்தியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட அருண் தனது தந்தையிடம் பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் விசாரணை செய்து பாலியல் வன்கொடுமை சட்டமான போஸ்கோ சட்டத்தின் கீழ் அபிஷேக், தமிழ்ச்செல்வன், தினேஷ்குமார், சஞ்சய்ரோசன் ஆகியே 4 பேரும் மீது வழக்கு பதிந்தனர்.
இதையடுத்து தமிழ்ச்செல்வன், தினேஷ்குமார், சஞ்சய்ரோசன் ஆகியே 3 பேரை போலீசார் கைது செய்து பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர் படுத்தி திருச்சி சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய தலைமறைவான அபிஷேக்கை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பள்ளியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.