செய்திகள்

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஹவாலா வேலை ஈடுபடாது- இல.கணேசன் எம்.பி.

Published On 2018-08-07 09:28 GMT   |   Update On 2018-08-07 09:28 GMT
ஆர்.கே.நகரைப் போன்று திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஹவாலா வேலை ஈடுபடாது என்று இல.கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். #BJP #LaGanesan
அலங்காநல்லூர்:

பாலமேட்டில் பா.ஜனதா கட்சியின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

சோழவந்தான் தொகுதி அமைப்பாளார் கோவிந்த மூர்த்தி தலைமை தாங்கினார். பொறுப்பாளர் சந்திரபோஸ் , நகர் தலைவர் குமரேசன் முன்னிலை வகித்தனர்.

மாநில செயாலளர் சீனிவாசன்,மாவட்ட தலைவர் சுசீந்திரன், தேனி பாராளுமன்ற பொறுப்பாளர்கள் ராஜபாண்டியன், கர்னல்பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வழி முறைகள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

இதில் கலந்து கொண்ட இல. கணேசன் எம்.பி நிருபர்களிடம் கூறியதாவது:-

தற்போது தமிழ்நாட்டில் நிலவிவரும் விலைவாசி உயர்வுக்கு பெட்ரோல்,டீசல் விலை மட்டுமே காரணம் இல்லை. மாநில அரசுகள் ஜி.எஸ்.டி. வரி வரம்பிற்குள் எரிபொருள் விற்பனையை கொண்டு வந்தால் 25 சதவீதம் வரை விலை குறைய வாய்ப்புள்ளது.

வரவுள்ள திருப்பரங்குன்றம் சட்டமன்றம் இடைத்தேர்தலில் ஆர்.கே. நகரில் ஒரு கட்சி வெற்றி பெற்றது. அதைபோல் இங்கும் அவர்களது ஹவாலா வேலை எடுபடாது.

பாரதிய ஜனதாவின் கூட்டணி வரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும். பா.ஜ.க. சாதாரண மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பல்வேறு வகையில் நலதிட்ட உதவிகளையும் வழங்கி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். #BJP #LaGanesan
Tags:    

Similar News