செய்திகள்

அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தில் 50 நாட்களில் 2 ஆயிரம் பேர் பயன் பெற்றனர்- அமைச்சர் தகவல்

Published On 2018-07-31 09:30 GMT   |   Update On 2018-07-31 09:30 GMT
அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தில் 50 நாட்களில் 2010 பேர் பரிசோதனை செய்து பயன் அடைந்துள்ளனர் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். #TNMinister #Vijayabaskar
சென்னை:

ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் உள்ள அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தில் ரத்த வகை கண்டறியும் அதிநவீன கருவியினை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் துவக்கி வைத்து பேசுகையில்,

இம்மையத்தில் கடந்த 50 நாட்களில் 2010 பேர் பரிசோதனை செய்து பயன் அடைந்துள்ளனர். மேலும், அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தில் பரிசோதனை செய்ததில் 177 பேருக்கு உயர் ரத்த அழுத்தமும், 355 பேருக்கு நீரிழிவு நோய் பாதிப்பும், 4 பேருக்கு இருதயம் சம்பந்தப்பட்ட நோய் பாதிப்பு, 14 பேருக்கு தைராய்டு பாதிப்பு, 23 பெண்களுக்கு கருப்பைவாய் புற்றுநோய் அறிகுறிகள், 17 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் அறிகுறிகள், 11 பேருக்கு பித்தப்பையில் கல் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், படிப்படியாக இதுபோன்ற மையங்கள் அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் விரிவுபடுத்தப்படும் என்றார்.  #TNMinister #Vijayabaskar
Tags:    

Similar News