செய்திகள்
சாத்தூரில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

லாரிகள் ஸ்டிரைக் எதிரொலி- தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டன

Published On 2018-07-27 10:49 IST   |   Update On 2018-07-27 10:49:00 IST
லாரிகள் ஸ்டிரைக் எதிரொலியாக சாத்தூர் பகுதியில் தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டன. இதனால் ரூ.100 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. #LorryStrike
சாத்தூர்:

டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று 8-வது நாளாக ஸ்டிரைக் நீடிக்கிறது. இதன் காரணமாக சாத்தூர், சிவகாசியில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை வெளிமாநிலங்களில் இருந்து கொண்டுவர முடியவில்லை. இதனால் ரூ.100 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

மூலப்பொருட்கள் இல்லாததால் சிவகாசி, சாத்தூர் பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகள் இன்று மூடப்பட்டன. இதனால் தீப்பெட்டி தொழிற்சாலை ஊழியர்கள் வேலை இழந்து உள்ளனர்.
Tags:    

Similar News