செய்திகள்

ஆத்தூர் காமராஜர் அணையின் நீர்மட்டம் 5½ அடியாக குறைந்தது

Published On 2018-06-24 22:42 IST   |   Update On 2018-06-24 22:42:00 IST
ஆத்தூர் காமராஜர் அணையின் நீர்மட்டம் 5½ அடியாக குறைந்ததால் திண்டுக்கல் நகருக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
செம்பட்டி:

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியான பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, ஆடலூர், பன்றிமலை, பண்ணைக்காடு, புல்லாவெளி, தடியன்குடிசை, மங்களம்கொம்பு, சோலைக்காடு ஆகிய பகுதிகளில் பெய்யும் மழைநீர் ஓடைகள் வழியாக மலையடிவாரத்தில் உள்ள ஆத்தூர் காமராஜர் அணைக்குவருகிறது.

இந்த அணையில் இருந்து திண்டுக்கல் மாநகராட்சி, சின்னாளபட்டி, சித்தையன்கோட்டை பேரூராட்சிகள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அணை நிரம்பி மறுகால் பாய்ந்தது.

தற்போது பண்ணைக்காடு, தாண்டிக்குடி, ஆடலூர், பன்றிமலை பகுதிகளில் பருவமழை முறையாக பெய்யவில்லை. இதனால் ஆத்தூர் காமராஜர் அணைக்கு நீர்வரத்து இல்லை. இதன்காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 5½ அடியாக காணப்பட்டது. இதனால் அணை குட்டைப்போல் காட்சியளிக்கிறது. இதனால் திண்டுக்கல் நகருக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. 
Tags:    

Similar News