செய்திகள்

வரத்து அதிகமானதால் மீன்கள் விலை குறைந்தது: மீனவர்கள் வேதனை

Published On 2018-06-17 18:33 IST   |   Update On 2018-06-17 18:33:00 IST
தடை காலத்திற்கு பிறகு கடலுக்குச் சென்ற மீனவர்கள் அதிக மீன்களுடன் கரை திரும்பினர். ஆனால் விலை குறைந்ததால் அவர்கள் வேதனைக்கு ஆளானார்கள்.

ராமேசுவரம்:

மீன்களின் இனப்பெருக்க காலம் காரணமாக கடந்த 2 மாதங்களாக கடலுக்கு சென்று மீன் பிடிக்க தடைக்காலம் அமலில் இருந்தது. இந்த காலம் முடிந்து மீன்பிடிக்க மீனவர்கள் தயாரான நிலையில், வானிலை ஒத்துழைக்க மறுத்தது.

சூறாவளி காற்று, ஆர்ப்பரித்த அலையின் சீற்றம் காரமணாக மீனவர்கள் யாரும் கடருக்கு செல்ல வேண்டாம் என அரசு அறிவுறுத்தியது. மீன்பிடி டோக்கன்களும் வழங்கப்பட வில்லை.

ஆனால் இந்த தடையை மீறி ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இன்று காலை கரை திரும்பிய மீனவர்கள், இறால் உள்ளிட்ட பல வகை மீன்களுடன் மகிழ்ச்சியாக கரை திரும்பினர்.

ஆனால் வரத்து அதிகம் காரணமாக மீன்களின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டது. மீன்களை வாங்க வந்த வியாபாரிகள், நிர்ணயித்த விலை மீனவர்களிடம் வேதனையை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News