செய்திகள்
ராமேசுவரத்தில் 50 சதவீத கடைகள் அடைப்பு
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். #ThoothukudiFiring #SterliteProtest #DMKBandh
ராமேசுவரம்:
தூத்துக்குடி போலீசாரின் அத்துமீறல், தமிழக அரசை கண்டித்து தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் இன்று மாநிலம் முழுவதும் கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து இருந்தன.
அதன்படி இன்று ராமேசுவரத்தில் 50 சதவீத கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பஸ் நிலையம், ரெயில் நிலையம், கோவில் பகுதிகளிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் ராமேசுவரத்துக்கு வந்த சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
தூத்துக்குடி சம்பவத்தை கண்டித்து சில அமைப்பினர் ஆர்ப்பாட்டமும் நடத்தினர். இதேபோல் பாம்பன், தங்கச்சிமடம் பகுதியிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஒரு சில கடைகள் மட்டும் திறக்கப்பட்டு இருந்தன. #ThoothukudiFiring #SterliteProtest #DMKBandh