செய்திகள்

மதுராந்தகம் அருகே காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி தற்கொலை

Published On 2018-05-02 09:00 IST   |   Update On 2018-05-02 09:00:00 IST
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர் தூக்கு மாட்டி தற்கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ளது சூணாம்பேடு. இங்குள்ள காவல் நிலையத்திற்கு சிற்றரசு (45) என்பவரை வழக்கு தொடர்பான விசாரணைக்காக போலீசார் அழைத்து வந்தனர்.

இந்நிலையில் அவர் காவல் நிலையத்தில் இன்று தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். அவரை போலீசார் அடித்துக்கொன்றதாக உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #tamilnews 

Similar News