செய்திகள்
அரியலூரில் கடையடைப்பு போராட்டம் காரணமாக பெரியகடைவீதியில் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி கிடந்த காட்சி.

நகராட்சி வரி உயர்வுக்கு எதிர்ப்பு- அரியலூரில் இன்று கடையடைப்பு

Published On 2018-03-27 10:37 IST   |   Update On 2018-03-27 10:37:00 IST
அரியலூர் நகராட்சியில் வீட்டு வரி, சொத்து வரி, தொழில் வரி உள்ளிட்ட வரிகள் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கடையடைப்பு போராட்டம் நடந்தது.
அரியலூர்:

அரியலூர் நகராட்சியில் வீட்டு வரி, சொத்து வரி, தொழில் வரி உள்ளிட்ட வரிகள் உயர்த்தப்பட்டன. இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

எனவே உயர்த்தப்பட்ட வரியை வாபஸ் பெறவேண்டும் என்பதை வலியுறுத்தி அரியலூரில் இன்று கடைகளை அடைத்து போராட்டம் நடத்தப்போவதாக வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.

அதன்படி இன்று அரியலூர் நகர் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன. பஸ் நிலையம், சின்னக்கடை, பெரிய கடை வீதிகள், திருச்சி மற்றும் பெரம்பலூர் ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள 1500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டது. மருந்து கடைகள் மட்டும் திறந்திருந்தன. கார், ஆட்டோ, பஸ்கள் வழக்கம் போல் இயங்கின.

கடைகள் அடைக்கப்பட்டதால் முக்கிய வீதிகள் பொது மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. இதனிடையே அரியலூர் நகராட்சி கமி‌ஷனர் வினோத், வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். #Tamilnews

Similar News