செய்திகள்

ரூ.500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரிக்கு 7 ஆண்டு சிறை

Published On 2018-03-13 12:36 IST   |   Update On 2018-03-13 12:36:00 IST
ரூ.500 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.வுக்கு 7 ஆண்டு சிறைதண்டனை விதித்து அரியலூர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
அரியலூர்:

அரியலூர் அருகே உள்ள பொய்யாதநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவர் அவரது மகள் திருமணத்திற்காக உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்தார். அதற்கு கிராம நிர்வாக அதிகாரியின் சான்றிதழ் தேவைப்பட்டதால், இலுப்பையூர் கிராம நிர்வாக அதிகாரி ராமசாமியை சந்தித்து சான்றிதழ் கேட்டுள்ளார். அதற்கு அவர் ரூ.500 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அண்ணாத்துரை, இது குறித்து திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, ராமசாமியை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்த போலீசார், ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து அனுப்பினர். அதனை அவர் இலுப்பையூர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று, ராமசாமியிடம் கொடுத்த போது, அங்கு மறைந்திருந்த போலீசார் ராமசாமியை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

இந்த வழக்கு அரியலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை முடிந்ததையடுத்து நீதிபதி இன்று தீர்ப்பு அளித்தார். அதில், வி.ஏ.ஓ. ராமசாமிக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். #Tamilnews

Similar News