செய்திகள்

தேனி மலை ஏறும் பயிற்சிக்கு குழந்தைகளையும் அழைத்து சென்றது அதிர்ச்சி அளிக்கிறது- தா.பாண்டியன்

Published On 2018-03-12 11:42 IST   |   Update On 2018-03-12 11:42:00 IST
தேனி மலை ஏறும் பயிற்சிக்கு குழந்தைகளையும் அழைத்து சென்றது அதிர்ச்சி அளிக்கிறது என்று தா.பாண்டியன் கூறியுள்ளார்.

கோபி:

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் தா.பாண்டியன் ஈரோடு மாவட்டம் கோபி வந்தார்.

அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் பிடித்த காட்டு தீயில் 9 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. மேலும் இந்த மலையேறும் பயிற்சியில் 7 வயது 10 வயது குழந்தைகளையும் அழைத்து சென்றது. மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.

வருங்காலத்தில் இதை ஆராய்ந்து தடுக்க வேண்டும். இந்த தீ விபத்தில் சிக்கியவர்களை மலைவாழ் மக்களால் தான் மீட்க முடியும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதை மத்திய- மாநில அரசுகள் மதிக்காமல் உள்ளது. இதை கண்டித்து போராட்டம் நடத்த உள்ளோம்.

ராகுல்காந்தி ராஜீவ் கொலையாளிகளை மன்னித்து விட்டதாக கூறி இருப்பது அவரது மனிதாபிமானத்தை காட்டுகிறது. கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டில் என்கவுண்டர், கொலைகள் அதிகரித்து உள்ளன. நாட்டில் உள்ள தலைவர்களின் சிலைகளை உடைப்பது நாகரீகமானது அல்ல. இதை ஏற்று கொள்ள முடியாது.

இவ்வாறு தா.பாண்டியன் கூறினார்.

Similar News