செய்திகள்
எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்- சி.ஆர்.சரஸ்வதி
தந்தை பெரியார் பற்றி அவதூறாக பேசி வரும் பா.ஜ.க. செயலாளர் எச். ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று சி.ஆர்.சரஸ்வதி கூறியுள்ளார்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்ட டி.டி.வி. தினகரன் அணி சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அரண்மனை வாசலில் நடந்தது. மாவட்டச் செயலாளர் உமாதேவன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் நடிகை சி.ஆர்.சரஸ்வதி பேசியதாவது:-
தமிழகத்தில் பா.ஜ.க. செயலாளர் எச்.ராஜா வன்முறையை தூண்டும் வகையில் பேசி வருகிறார். சுய மரியாதை கருத்துக்களை பரப்பிய பெரியார் சிலையை உடைக்குமாறு கூறி வருகிறார்.
எடப்பாடி-ஓ.பி.எஸ். ஆகியோர் பெரியார் படத்தை கட்சியில் பயன்படுத்துகிறார்கள். ராஜாவின் பேச்சை தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்டித்தன. பல்வேறு போராட்டங்களை நடத்தினர். எடப்பாடியும், ஓ.பி.எஸ்.சும் மவுனமாக உள்ளனர்.
பெரியார் பற்றி தவறாக கருத்து கூறிய எச். ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது இட்லி சாப்பிட்டார் என்று நான் கூறியது உண்மை தான்.
விரைவில் 18 எம்.எல்.ஏ.க்கள் பற்றிய நீதிமன்ற தீர்ப்பு வரும். டி.டி.வி. தினகரன் முதல்வராவார்.
இவ்வாறு அவர் பேசினார். #Tamilnews