செய்திகள்
எச்.ராஜா வீட்டின் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

காரைக்குடியில் எச்.ராஜா வீட்டுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

Published On 2018-03-07 12:59 IST   |   Update On 2018-03-07 12:59:00 IST
காரைக்குடியில் உள்ள எச்.ராஜா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. #PeriyarStatue #Periyar #HRaja
காரைக்குடி:

திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது போல தமிழகத்தில் பெரியார் சிலைகள் உடைத்து அகற்றப்படும் என்று பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கருத்து தெரிவித்தார்.

எச்.ராஜாவின் கருத்து தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. திரிபுராவில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பெரியார் சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

எச்.ராஜாவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. எனவே சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்பிரமணியபுரம் 10-வது வீதியில் (வடக்கு) உள்ள எச்.ராஜா வீட்டுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வழக்கமாக 2 போலீசார் எச்.ராஜா வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். தற்போது கூடுதலாக 4 போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் போலீஸ் ரோந்து வாகனமும் அங்கு நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணியை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.  #Tamilnews

Similar News