செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் அருகே குடோனில் பதுக்கிய ரூ.3 கோடி செம்மரகட்டைகள் பறிமுதல்: 2 பேர் கைது

Published On 2018-01-06 13:58 IST   |   Update On 2018-01-06 13:58:00 IST
ஸ்ரீபெரும்புதூர் அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.3 கோடி மதிப்புள்ள செம்மரகட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
ஸ்ரீபெரும்புதூர்:

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வளர்புரத்தில் உள்ள ஒரு குடோனில் செம்மரகட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக டி.எஸ்.பி. சிலம்பரசனுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் அதிரடி சோதனை செய்தனர்.

போலீசார் குடோனுக்குள் சென்ற போது அங்கிருந்த 2 பேர் தப்பி ஓடினார்கள். உடனே போலீசார் அவர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் திருமுல்லைவாயலை சேர்ந்த கிருஷ்ணன், சிதம்பரத்தை சேர்ந்த கோவிந்தன் என்பது தெரிய வந்தது.

குடோனில் சோதனை செய்த போது 622 செம்மர கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதன் மதிப்பு ரூ.3 கோடி ஆகும். அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.



செம்மர கட்டைகள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது? இதில் தொடர்புடையவர்கள் யார்? என்பது குறித்தும் குடோனில் உரிமையாளர் பற்றியும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Similar News