செய்திகள்

நாகை மாவட்டத்தில் கனமழை: 10 ஆயிரம் மீனவர்கள் 6-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை

Published On 2017-11-03 14:16 GMT   |   Update On 2017-11-03 14:17 GMT
நாகை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வருமானத்தை இழந்துள்ளனர்.
நாகை:

நாகை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது. வங்க கடலில் தொடர்ந்து கடல் சீற்றமாக இருந்து வருகிறது. அலைகளும் சீறி பாய்ந்து வருவதாலும் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதாலும் நாகை மாவட்ட மீனவர்கள் கடந்த 5 நாளாக கடலுக்கு செல்லவில்லை.

குறிப்பாக நாகை, செல்லூர், நாகூர், வேளாங்கண்ணி, தரங்கம்பாடி, சின்னங்குடி, பூம்புகார், வானகிரி, பெருந்தோட்டம் , தென்னாம்பட்டி, திருமுல்லைவாசல், கொட்டாய்மேடு, பழையாறு, மற்றும் வேதாரண்யம், ஆறுக்காட்டுத்துறை, புஷ்பவனம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் இன்று 6-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.

இதனால் மாவட்ட கடலோரம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட விசை படகுகள் ஓய்ந்து கிடக்கின்றன. சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  பைபர் படகுகள் கரையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் நாகை மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வருமானத்தை இழந்துள்ளனர்.

இதேபோல் வேதாரண்யம் பகுதியில் உப்பு தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உப்பள பாத்திகளில் மழைநீர் புகுந்ததால் உப்பளங்கள் மூழ்கி கிடக்கின்றன. இதனால் உப்பு உற்பத்தி தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளனர்.
Tags:    

Similar News