செய்திகள்
சீர்காழி அருகே கடல் சீற்றம்: மாயமான 4 மீனவர்கள் இன்று கரை திரும்பினர்
சீர்காழி அருகே மாயமான 4 மீனவர்கள் இன்று கரை திரும்பியதால் உறவினர்கள் நிம்மதி அடைந்தனர். அவர்கள் 4 பேரையும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த தொடுவாயை சேர்ந்த சின்னையன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் சின்னையன், அதே பகுதியை சேர்ந்த மதியழகன், காசிராஜன், கபிலன் ஆகிய 4 மீனவர்கள் நேற்று காலை மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் மாலை வீடு திரும்பி இருக்க வேண்டும் ஆனால் அவர்கள் மாயமாகி விட்டனர். இதனால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் குமரவேலு தலைமையில் அவர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் மாயமான 4 மீனவர்களும் இன்று காலையில் கரை திரும்பினர். இது தொடர்பாக அவர்களிடம் கேட்ட போது நேற்று நாங்கள் மீன் பிடித்து கொண்டிருந்த போது கடல்சீற்றம் ஏற்பட்டது. இதனால் படகு எங்களது கட்டுபாட்டை இழந்து கோடியக்கரை பகுதிக்கு சென்று விட்டன. தற்போது கடல் சீற்றம் குறைந்ததால் கரை திரும்பி விட்டுடோம் என்று தெரிவித்தனர்.
மீனவர்கள் கரை திரும்பியதால் அவர்களின் உறவினர்கள் நிம்மதி அடைந்தனர். அவர்கள் 4 மீனவர்களையும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.