செய்திகள்
கடலூர்: 3 பெண்களை மணந்த கல்யாண மன்னன் குண்டர் சட்டத்தில் கைது
கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 3 பெண்களை மணந்த கல்யாண மன்னன் உள்பட ரவுடிகள், கொள்ளையர்கள் ஆகிய 100 பேர் குண்டர் சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து குற்ற செயல்கள், கொலைகள், கொலை முயற்சிகள், கொள்ளைகள், தொடர் மது கடத்தல் நடந்து வந்தது.
இதை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். குற்றசெயலில் ஈடுபட்டவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். கடந்த 2 ஆண்டுகளில் 100 பேர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டார்கள்.
தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 40 ரவுடிகள் மற்றும் திருட்டு, வழிப்பறி வழக்குகள் தொடர்பாக சென்னையைச் சேர்ந்த லால் என்கிற சங்கர் லால், சேலத்தைச் சேர்ந்த சுரேஷ், தஞ்சையைச் சேர்ந்த பாடலி உள்ளிட்ட 23 கொள்ளையர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
மேலும் கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த கடலூர், புதுவையைச் சேர்ந்த 32 பேரும், மணல் கொள்ளைத் தொடர்பாக சினிமா தயாரிப்பாளர் சிவமணி, போதை பொருள் கடத்தல் தொடர்பாக விருத்தாசலம் சிவக்குமார், திட்டக்குடி கிருஷ்ணன் ஆகியோரும் குண்டர் சட்டத்தில் கைதானவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
3 பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்த டி.புடையூர் மணிவேல் என்பவரும் குண்டர் சட்டத்தில் கைதானார். மாவட்டம் முழுவதும் 2 ஆண்டுகளில் 100 பேரை கைது செய்து அதிரடி நடவடிக்கை எடுத்து இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கூறினார்.
இதன்மூலம் புதுவை ரவுடிகள் மற்றும் கடலூர் மாவட்ட ரவுடிகள் குற்ற செயல்களை குறைத்து கட்டுப்பாட்டில் வைத்து வருகிறோம். இதுபோன்ற அதிரடி நடவடிக்கை எடுப்பது மூலம் அணைத்து குற்ற செயல்களும் கட்டுப்பாட்டில் உள்ளது என்றார்.
இனி வருங்காலங்களில் குற்ற செயல்களில் யார் ஈடுபட்டாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
பண்டிகை நாட்கள் தற்போது வரவுள்ளதால் குற்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம் என்றும் போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.