செய்திகள்

ஈரோடு - பள்ளிபாளையம் காவிரி ஆற்று பாலம் வரும் 8-ந் தேதி திறப்பு

Published On 2017-10-06 19:35 IST   |   Update On 2017-10-06 19:36:00 IST
ரூ.33 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ஈரோடு-பள்ளிபாளையம் காவிரி ஆற்று பாலத்தை வரும் 8-ந் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:

ஈரோடு- நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை இணைக்கும் காவிரி ஆற்றுப்பாலம் மிக குறுகிய பாலமாக இருந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது.

இதையொட்டி அந்த பழைய மேம்பாலம் அருகே புதிய உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வந்தது. ரூ.33.3 கோடி மதிப்பில் அந்த புதிய பாலம் கட்டும் பணி முடிந்து உள்ளது.

இந்த உயர்மட்ட மேம்பாலத்தின் திறப்பு விழா வரும் 8-ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) மாலை 4 மணிக்கு நடக்கிறது. பள்ளிபாளையம் பஸ் நிலையம் அருகே விழா மேடை அமைக்கப்படுகிறது. விழாவுக்கு மின் துறை அமைச்சர் தங்கமணி தலைமை தாங்குகிறார். அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன், சரோஜா ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

இதில் தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட புதிய பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்து சிறப்புரை ஆற்றுகிறார்.

விழாவில் ஈரோடு எம்.பி. செல்வகுமார சின்னையன், நாமக்கல் எம்.பி. சந்தரம், ஈரோடு எம்.எல்.ஏக்கள் கே.வி.ராமலிங்கம், தென்னரசு, நாமக்கல் மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் பொன்.சரஸ்வதி, பாஸ்கர், சந்திரசேகர், மூர்த்தி, உள்பட அரசு அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

முனனதாக நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் வரவேற்கிறார். முடிவில் பொறியாளர் செல்வம் நன்றி கூறுகிறார்.

மேம்பாலம் விழாவையொட்டி பள்ளிபாளையம் பஸ் நிலையத்தில் மேடை அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

இந்த பணியை மின்வாரிய துறை அமைச்சர் தங்கமணி பார்வையிட்டு ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த புதிய பாலம் திறக்கப்பட்டதும் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும்.

Similar News