செய்திகள்
கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக அதிகஅளவில் வந்தவர்களை படத்தில் காணலாம்

கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் வருகை அதிகரிப்பு

Published On 2017-10-04 04:02 GMT   |   Update On 2017-10-04 04:02 GMT
கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் உள் நோயாளிகளின் வருகை அதிகரிப்பால் போதிய படுக்கை வசதி இல்லாமல் தரையில் படுத்து நோயாளிகள் சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர்.

தற்போது கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் 12 பேர் டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதால் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் வருகை அதிகரித்துள்ளது. அவர்களுக்கு ரத்த பரிசோதனை நடத்தப்பட்டு டெங்கு அறிகுறிகள் இருக்கிறதா என கண்டறியப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் நோயை கண்டறிவதற்கு பயன்படும் ரசாயனத்தில் ஒன்றான என்.எஸ்.1 என்கிற வகை ரசாயனத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் டெங்கு காய்ச்சல் இருக்கிறதா என்பதை கண்டறிவதற்கான ரத்த பரிசோதனை மேற்கொள்ள வெளியே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வெளியில் உள்ள தனியார் ஆய்வு கூடங்களில் சென்று விசாரித்தால் ரத்த பரிசோதனைக்கு ரூ.500 முதல் ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது.

மேலும் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஆண், பெண் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனித்தனி வார்டுகள் உள்ளன.


காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் போதிய படுக்கை வசதி இல்லாததால் தரையில் படுத்து சிகிச்சை பெற்று வருவதை படத்தில் காணலாம்.

தற்போது உள் நோயாளிகளின் வருகை அதிகரிப்பால் போதிய படுக்கை வசதி இல்லாமல் தரையில் படுத்து நோயாளிகள் சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே நோயால் அல்லல் பட்டு வரும் நோயாளிகள் கொசுக் கடி, கடும் குளிர் போன்றவற்றால் அவதிப்பட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News