செய்திகள்
பண்ருட்டி கெடிலம் ஆற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி
பண்ருட்டி கெடிலம் ஆற்றில் மூழ்கி பலியான மாணவர்களின் உடலை பார்த்து பெற்றோர்கள், உறவினர்கள் கதறி அழுதது நெஞ்சை உருக்கியது. இந்த சம்பவம் பண்ருட்டியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி லிங்க் ரோட்டில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருபவர் அ.தி.மு.க. பிரமுகர் பிரகாஷ். இவரது மகன் திவாகர்(வயது 15). இவரும் பண்ருட்டி பஸ் நிலையம் எதிரில் ஜெயப்பிரியா நகரில் சலூன் நடத்தி வரும் வெங்கடேசன் என்பரது மகன் ஹரிகேஷ் (15), வாழப்பட்டை சேர்ந்த மோகேஷ் (14) ஆகிய 3 பேரும் பண்ருட்டி லிங் ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தனர்.
இவர்கள் மூவரும் நேற்று கெடிலம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள திருவதிகை அணை கட்டு பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். அங்கு அணையின் மேலே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு ஆற்று தண்ணீரில் இறங்கி குளித்தனர். அப்போது ஆழமான புதைகுழியில் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்தனர். சிறிது நேரத்தில் நீரில் மூழ்கி 3 பேரும் பரிதாபமாக இறந்தனர்.
தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் மற்றும் போலீசார், தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்தனர்.
பொதுமக்கள் உதவியுடன் காவல்துறையினர் ஆற்றில் இறங்கி மாணவர்களின் உடலை தேடினார்கள். பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேலு, தாசில்தார் விஜய் ஆனந்து ஆகியோர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு 3 பேர் உடலை மீட்டனர்.