செய்திகள்

அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்தலை 6 மாதத்தில் நடத்த வேண்டும்: கே.சி.பழனிச்சாமி கடிதம்

Published On 2017-09-30 03:42 GMT   |   Update On 2017-09-30 03:42 GMT
அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் பதவி இல்லை என்ற நிலையில், அப்பதவிக்கான தேர்தலை 6 மாதத்திற்குள் நடத்த வேண்டும் என அக்கட்சியின் முன்னாள் எம்.பி கே.சி.பழனிச்சாமி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை:

அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் பதவி இல்லை என்ற நிலையில், அப்பதவிக்கான தேர்தலை 6 மாதத்திற்குள் நடத்த வேண்டும் என அக்கட்சியின் முன்னாள் எம்.பி கே.சி.பழனிச்சாமி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைந்த பின்னர் சமீபத்தில் கூடிய அக்கட்சியின் பொதுக்குழுவில், பொதுச்செயலாளர் என்ற பதவி நீக்கப்பட்டு அதற்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கொண்டு வரப்பட்டன.

இந்நிலையில், அக்கட்சியின் முன்னாள் எம்.பி கே.சி.பழனிச்சாமி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை இன்று எழுதியுள்ளார். அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் பதவி இல்லை என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளதற்கு எதிராக கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அவர், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் பதவிக்கு 6 மாதத்தில் தேர்தலை நடத்த வேண்டும் எனவும், கட்சியின் அடிப்படை விதிகளில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இரட்டை இலை சின்னத்தை ஓ.பன்னீர் செல்வம் - எடப்பாடி பழனிச்சாமி அணிக்கே வழங்கலாம் என்றும், கட்சியின் அடிமட்ட தொண்டர்களின் உரிமைகளை தேர்தல் ஆணையம் காக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Tags:    

Similar News