செய்திகள்

சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டம்

Published On 2017-09-26 06:00 GMT   |   Update On 2017-09-26 06:00 GMT
அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்கக்கோரி சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
சிதம்பரம்: 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள ராஜாமுத்தையா மருத்துவ கல்லூரி  மாணவமாணவிகள் கடந்த 30ந் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அரசு நிர்ணயித்த கட்டணத்தையே மாணவ மாணவிகளிடம் வசூலிக்க வேண்டும். ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரி  மருத்துவ மனையில் நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவக் கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை படிக்கும் மாணவமாணவிகள்  இந்த தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

நேற்று காலை முதல் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மாணவமாணவிகள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை  தொடங்கினர். 

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவமாணவிகள் நேற்று இரவு 7 மணி அளவில் தங்கள் கைகளில் மெகுழுவர்த்தி ஏந்தி  உண்ணாவிரதம் மேற்கொண்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியபடி இருந்தனர். விடிய விடிய உண்ணா விரதத்தில் ஈடுபட்டனர். இன்று காலையிலும் உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்தது. இதில்  ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News