செய்திகள்
பெருங்களத்தூர் மேம்பாலத்தில் மாநகர பஸ் கவிழ்ந்தது: 50 பயணிகள் உயிர் தப்பினர்
பெருங்களத்தூர் மேம்பாலத்தில் மாநகர பேருந்தின் டீசல் டேங்க் உடைந்து கவிழ்ந்த விபத்தில் 50 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தாம்பரம்:
தாம்பரத்தில் இருந்து கோவளத்துக்கு இன்று காலை 9.30 மணியளவில் மாநகர பஸ் (எண் 517) சென்றது. டிரைவர் விஜயகுமார் பஸ்சை ஓட்டினார். கண்டக்டராக சுரேஷ் இருந்தார். பஸ்சில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
பெருங்களத்தூர் மேம்பாலத்தில் இறங்கியபோது முன்னாள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க பஸ்சை டிரைவர் திருப்பினார்.
கட்டுப்பாட்டை இழந்த பஸ் மேம்பாலத்தில் இருந்த தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு வெளியே வந்து சரிந்தது. இதில் அங்கு வைக்கப்பட்டு இருந்த பெயர் பலகையும் உடைந்தது.
மோதிய வேகத்தில் பஸ்சின் டேங்க் உடைந்து டீசல் கொட்டியது. அதிர்ச்சி அடைந்த பயணிகள் அலறியடித்து கீழே இறங்கி ஓடினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சிறிது நேரத்தில் டீசல் முழுவதும் வெளியேறி நின்றதால் பயணிகள் நிம்மதி அடைந்தனர். பஸ்சின் கண்ணாடி உடைந்ததில் டிரைவர் விஜயகுமாருக்கு காயம் ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்த டிரைவர் விஜயகுமாருக்கு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த விபத்தால் தாம்பரம்- செங்கல்பட்டு மார்க்கத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ராட்சத கிரேன் மூலம் விபத்துக்குள்ளான பஸ்சை அகற்றிய பின்னரே போக்குவரத்து நெரிசல் சீரானது.
மேம்பாலம் முடியும் இடம் அருகே பஸ் சரிந்ததால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. அதிர்ஷ்டவசமாக 50 பயணிகள் உயிர் தப்பி உள்ளனர்.
இது குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள்.