செய்திகள்

கம்மாபுரத்தில் போலி டாக்டர் கைது: போலீசார் விசாரணை

Published On 2017-08-12 09:35 IST   |   Update On 2017-08-12 09:35:00 IST
கம்மாபுரத்தில் மருத்துவம் படிக்காமல் வீட்டில் வைத்து பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் கம்மாபுரத்தை சேர்ந்தவர் ராமசந்திரன் (வயது 60) இவர் மருத்துவம் படிக்காமல் வீட்டில் வைத்து பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வருவதாக சுகாதார துறையினருக்கு புகார் சென்றது.

இதையடுத்து அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சாமிநாதன் தலைமையிலான மருத்துவ குழுவினர் கம்மாபுரத்தில் உள்ள ராமசந்திரன் வீட்டுக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அவரிடம் மருத்துவம் படித்தற்கான உரிய சான்றிதழ் எதுவும் இல்லை.

இதையடுத்து அவரை கம்மாபுரம் போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ராமசந்திரனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News