செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கார்த்தி சிதம்பரம் சாமி தரிசனம்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சாமி தரிசனம் செய்தார்.
சிதம்பரம்:
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். தமிழக காங்கிரஸ் கட்சி முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக உள்ளார். சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு இன்று காலை கார்த்தி சிதம்பரம் சாமி தரிசனம் செய்வதற்காக வந்தார்.
கோவிலில் உள்ள நடராஜர், சிவகாமசுந்தரி அம்மன், சித்ரகுப்தர் ஆகிய சன்னதிகளில் தரிசனம் செய்தார். பின்னர் கோவில் அருகே உள்ள தில்லை காளிஅம்மன் கோவிலுக்கு சென்று அங்கும் வழிபாடு செய்தார். பின்னர் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.