செய்திகள்
கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியபோது எடுத்த படம்.

சிதம்பரம் பகுதி மக்களிடம் அன்புமணி ராமதாஸ் கருத்து கேட்டார்

Published On 2017-08-05 16:13 IST   |   Update On 2017-08-05 16:13:00 IST
பெட்ரோலிய கெமிக்கல் மண்டலம் குறித்து சிதம்பரம் பகுதி பொதுமக்களிடம் அன்புமணி ராமதாஸ் கருத்து கேட்டறிந்தார்.
சிதம்பரம்:

கடலூர், நாகை மாவட்டங்களை சேர்ந்த 45 கிராமங்களை உள்ளடக்கிய பெட்ரோலிய ரசாயன மண்டலம் அமைக்கப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கிராம மக்களிடம் கருத்துகேட்க முன்னாள் மத்திய மந்திரியும், பா.ம.க. மாநில இளைஞர் அணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் எம்.பி. முடிவு செய்தார்.

அதன்படி இன்று மதியம் 12.30 மணிக்கு அவர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பெரியப்பட்டு கிராமத்துக்கு வந்தார். அங்கு மக்களிடம் கருத்துகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் மக்களிடம் கருத்து கேட்டறிந்தார்.

பொதுமக்கள் கூறும்போது, கடலூர் மாவட்டத்தில் பெட்ரோலிய மண்டலம் அமைக்கக்கூடாது. பெட்ரோல் மண்டலம் அமைத்தால் விவசாயம் பெரிதும் பாதிக்கும் என ஆவேசமாக கூறினர். அதன்பின்னர் அன்புமணி ராமதாஸ் அரிய கோஷ்டி, கடவாச்சேரி ஆகிய கிராமங்களுக்கு சென்று அங்குள்ள மக்களிடமும் கருத்துகேட்டார்.

கடலூர் மாவட்ட மக்களிடம் கருத்துகேட்ட பின்பு அன்புமணி ராமதாஸ் மதியம் நாகை மாவட்டம் சென்று மாதானம், திருமுல்லைவாசல், மங்கைமடம் ஆகிய கிராமங்களுக்கு சென்று பொதுமக்களிடம் கருத்து கேட்கிறார்.

Similar News