செய்திகள்

சென்னை விமான நிலைய தீயணைப்பு நிலையத்துக்கு நவீன வசதிகளுடன் 3 தீயணைப்பு வாகனங்கள்

Published On 2017-06-10 10:26 IST   |   Update On 2017-06-10 10:26:00 IST
சென்னை விமான நிலைய தீயணைப்பு நிலையத்துக்கு நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய 3 தீயணைப்பு வாகனங்கள் புதிதாக வாங்கப்பட்டு உள்ளன.
ஆலந்தூர்:

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தனியாக தீயணைப்பு நிலையம் உள்ளது. இந்த தீயணைப்பு நிலையத்தில் நவீன வசதிகளுடன் கூடிய தீயணைப்பு வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில் ஆஸ்திரியா நாட்டில் இருந்து நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய 3 தீயணைப்பு வாகனங்கள் புதிதாக வாங்கப்பட்டு உள்ளன. இந்த தீயணைப்பு வாகனத்தில் 10 ஆயிரம் லிட்டர் தண்ணீரும், 1,300 லிட்டர் சோப்பு நுரையும் (போர்ம்) சேகரித்து வைக்கும் கொள்ளளவு கொண்டது. 15 கிலோ மீட்டரில் இருந்து 120 கிலோ மீட்டர் வேகத்தில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முடியும்.

மேலும் இந்த வாகனத்தை ஒருவரே இயக்க கூடிய வசதிகள் கொண்டது. இந்த தீயணைப்பு வாகனத்தின் மதிப்பு ரூ.6½ கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நவீன தொழில் நுட்ப வாகனத்தை இயக்குவது எப்படி? என்று விமான நிலைய தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த புதிய தீயணைப்பு வாகனங்களை விமான நிலைய தீயணைப்பு துறைக்கு சென்னை விமான நிலைய இயக்குனர் சந்திரமவுலி வழங்கி, வீரர்களுக்கான பயிற்சியை தொடங் கிவைத்தார்.

இதனால் ஏற்கனவே தீயணைப்பு நிலையத்தில் உள்ள நவீன வசதிகளுடன் கூடிய தீயணைப்பு வாகனங்கள் வேறு விமான நிலையத்துக்கு மாற்றப்பட உள்ளது. 

Similar News