செய்திகள்

உழவன் எக்ஸ்பிரசில் என்ஜின் கோளாறு: 3 ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம் - பயணிகள் அவதி

Published On 2017-06-01 04:03 GMT   |   Update On 2017-06-01 04:19 GMT
சென்னையில் இருந்து தஞ்சாவூர் சென்ற உழவன் எக்ஸ்பிரசில் என்ஜின் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக 3 ரெயில்கள் நடுவழியில் நின்றது. இதனால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.
தஞ்சாவூர்:

சென்னையில் இருந்து தஞ்சைக்கு நேற்று இரவு உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு வந்தது. இந்த ரெயில் இன்று காலை 7 மணிக்கு நாகை மாவட்டம் குத்தாலம் பகுதியில் வந்து கொண்டிருந்தது.

அப்போது என்ஜினில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து உழவன் எக்ஸ்பிரஸ் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால் மற்ற ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டது.

ஆடுதுறையில் வாரணாசி- ராமேஸ்வரம் எக்ஸ்பிரசும், கும்பகோணத்தில் மைசூர் எக்ஸ்பிரசும், தஞ்சையில் மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரெயிலும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

சுமார் 1½ மணி நேரமாக ரெயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டதால் பயணிகள் பெரிதும் அவதிக்கு உள்ளானார்கள். மயிலாடுதுறையில் இருந்து மாற்று என்ஜின் கொண்டு செல்லப்பட்டு உழவன் எக்ஸ்பிரசில் இணைத்து அதனை இயக்கிய பின்னர் மற்ற ரெயில்கள் புறப்பட்டு சென்றது.
Tags:    

Similar News