செய்திகள்

ஜெயலலிதா தங்கி இருந்த சிறுதாவூர் பங்களாவில் திடீர் தீவிபத்து

Published On 2017-05-29 07:29 GMT   |   Update On 2017-05-29 07:30 GMT
திருப்போரூரை அடுத்த சிறுதாவூர் கிராமத்தில் ஜெயலலிதா தங்கி இருந்த பங்களாவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
திருப்போரூர்:

திருப்போரூரை அடுத்த சிறுதாவூர் கிராமத்தில் மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா தங்கி இருந்த பங்களா உள்ளது.

இதனை சுற்றி சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் சவுக்குமரங்கள் மற்றும் வயல்வெளிகள் உள்ளன.

இதன் நுழைவு வாயில் பழைய மாமல்லபுரம் சாலையில் ஆலத்தூரை அடுத்து உள்ளது. சுட்டெரிக்கும் வெயில் காரணமாக பல ஏக்கர் பரப்பளவு கொண்ட வயல்வெளிகள் தற்போது காய்ந்து காணப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று பகல் 1 மணியளவில் இங்குள்ளஒரு பகுதியில் திடீரென தீப்பற்றியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. காற்றின் வேகத்தில் தீ மளமளவென பரவி காய்ந்த புற்கள், செடி, கொடிகளில் பற்றி எரிந்தது.

தகவலறிந்ததும் சிறுசேரி, திருக்கழுக்குன்றம் தீயணைப்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

திருப்போரூர் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் தீவிபத்து ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 19-ந்தேதி இதே வளாகத்தில் இதே போல் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News