செய்திகள்
காஞ்சீபுரத்தில் தே.மு.தி.க. பிரமுகர் கொலை: காட்பாடி கோர்ட்டில் 4 பேர் சரண்
காஞ்சீபுரத்தில் தே.மு.தி.க. பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேர் காட்பாடி கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் பிள்ளையார்பாளையம் செங்கல்வராயன் ஒத்தவாடை தெருவைச் சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மகன் சரவணன் (வயது 38). தே.மு.தி.க. தலைமை கழக பேச்சாளரான இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு 10.20 மணியளவில் சரவணன் தனது வீட்டில் இருந்தார். அப்போது அவருக்கு ஒரு போன் அழைப்பு வந்தது.
உடனே அவர் வீட்டைவிட்டு வெளியே வந்தார். அப்போது வீட்டின் அருகில் பதுங்கியிருந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரை கத்தியால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து காஞ்சீபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் மேற்பார்வையில் பெரிய காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கொலை கும்பலை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் சரவணன் கொலை வழக்கில் தொடர்புடைய காஞ்சீபுரத்தை சேர்ந்த 4 பேர் வேலூர் மாவட்டம் காட்பாடி கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தனர். விசாரணையில் அவர்கள் காஞ்சீ புரம் பல்லவர்மேடு பகுதியை சேர்ந்த கோகுல் (25), கார்த்திக் (25), பிரபாகரன் என்கிற சரவணன், பாண்டவர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த சுரேஷ் (25) என்பது தெரியவந்தது. கோர்ட்டு உத்தரவின் பேரில் அவர்கள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் கோர்ட்டில் சரண் அடைந்த பிரபாகரனின் அண்ணனை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சரவணனின் தம்பி கொலை செய்ததாகவும், அதற்கு பழிக்குப்பழி வாங்க இந்த கொலை நடந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.