செய்திகள்

வாடிப்பட்டியில் வினோதமான வாழைப்பழம்: ஒரே தாரில் இருநிறம்

Published On 2017-03-30 17:46 IST   |   Update On 2017-03-30 17:46:00 IST
வாடிப்பட்டி பெட்டிக்கடையில் வாழைத்தார் விற்பனைக்காக தொங்க விடப்பட்டது. அதில் ஓரேதாரில் மஞ்சள் நிறமுடைய வாழைப்பழம் 14, சிவப்பு நிறமுடைய வாழைப்பழம் 22 ஆக 36 பழங்கள் இருந்தது.

வாடிப்பட்டி:

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ்நிலையம் முன்பு உள்ள ஒரு பெட்டிக்கடையில் நிலக்கோட்டையிலிருந்து வாங்கி வந்த வாழைத்தார் விற்பனைக்காக தொங்க விடப்பட்டது.

அதில் ஓரேதாரில் மஞ்சள் நிறமுடைய வாழைப்பழம் 14, சிவப்பு நிறமுடைய வாழைப்பழம் 22 ஆக 36பழங்கள் இருந்தது. இந்த பழங்கள் நிறத்தில் மட்டும் வேறுபாடு உள்ளது என்று நினைத்தபோது அதை சாப்பிட்டுபார்த்தபோது சுவையிலும் வேறுபாடு தெரிந்தது.

மஞ்சள்பழம் ரஸ்தாலி சுவையும், சிவப்புபழம் நேந்திரம்பழசுவையுடனும் இருந்தது மேலும் அதிசயத்தை உருவாக்கியது.

இந்த அதிசய வாழைப்பழத்தை பத்திரமாக பாதுகாக்கவும் முடியாது. காரணம் இறைவன் படைப்பில் வாழைப்பழம் மட்டும் தான் குருத்திலிருந்து தண்டு, மட்டை, இலை, பூ, காய், பழம் என்று தான் வளரும் பருவத்தில் உள்ள அனைத்தையும் பிரதிபலன் பார்க்காமல் பயன்படுத்திக் கொள்ள உதவும் தன்மை உடையது. அதனால் தான் மீண்டும் பிறவாவரம் பெற்றது என்று கிருபானந்தவாரியார் கூறியுள்ளார்.

Similar News