செய்திகள்

கோபி அருகே அமைச்சர் செங்கோட்டையன் வரவேற்பு பேனா கிழிப்பு

Published On 2017-03-24 15:23 IST   |   Update On 2017-03-24 15:23:00 IST
கோபி அருகே அமைச்சர் செங்கோட்டையனை வரவேற்று பேனர் வைக்கப்பட்டு இருந்தது. இதில் சசிகலா, ஜெயலலிதா படம் கிழிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு:

கோபி லக்கம்பட்டி அருகே கரட்டடி பாளையத்தில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனை வரவேற்று பேனர் வைக்கப்பட்டு இருந்தது. இதில் மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா, அ.தி.மு.க. பொது செயலாளர் சசிகலா படமும், செங்கோட்டையன் படமும் உள்ளது.

இதில் ஜெயலலிதா- சசிகலா படம் கிழிக்கப்பட்டு உள்ளது, சசிகலா அதிருப்தியாளர்கள் இந்த படத்தை கிழித்தார்களா? அல்லது மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் இந்த செயலில் ஈடுபட்டார்களா? என்பது தொயவில்லை .

இந்த சம்பவம் கோபி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News