செய்திகள்

சத்தியமங்கலம் வனப்பகுதி திம்பம் மலைப்பாதையில் கடும் பனி மூட்டம்

Published On 2017-03-21 16:33 IST   |   Update On 2017-03-21 16:33:00 IST
கோடையில் அதிக வெப்பத்துக்கு மக்கள் சிரமத்துக்குள்ளாகிய நிலையில் திம்பம் மலைப் பாதையில் நிலவும் பனிப் பொழிவால் பயணிகள், சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை ரசித்தபடியும் செல்கிறார்கள்.
சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர், திம்பம் வனப்பகுதியில் சில தினங்களாக மழை பெய்தது. இதனால் வனப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான கால நிலை நிலவியது.

தற்போது திம்பம் மலைப்பாதையில் திடீரென பனிமூட்டம் காணப்படுகிறது. ஆசனூர், திம்பம் மலைக்குன்றுகளில் மேகமூட்டம் படர்ந்து வெள்ளைகம்பளம் விரித்தாற்போல் காட்சியளிக்கிறது. அங்கு காலை 7 மணிவரை இருள் சூழ்ந்தது காணப்படுகிறது.

திடீரென ஏற்பட்ட பனிப்பொழிவால் திம்பம் மலைப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினர். பனிமூட்டம் திம்பம் சாலையை சூழ்ந்துகொண்டு எதிரே வாகனங்கள் தெரியாதபடி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி வாகனங்களை ஓட்டிச் சென்றனர்.

கோடையில் அதிக வெப்பத்துக்கு மக்கள் சிரமத்துக்குள்ளாகிய நிலையில் திம்பம் மலைப் பாதையில் நிலவும் பனிப் பொழிவால் பயணிகள், சுற்றுலா பயணிகள் திம்பம் மலைப்பாதையில் நின்று இளைப்பாறிச் செல்கின்றனர். இயற்கை அழகை ரசித்தபடியும் செல்கிறார்கள்.

Similar News