செய்திகள்

தீபாவுக்கு தொண்டர்கள்- பொதுமக்கள் ஆதரவு உள்ளது: முன்னாள் எம்.எல்.ஏ. பேச்சு

Published On 2017-02-02 10:34 IST   |   Update On 2017-02-02 10:35:00 IST
மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு கட்சியின் தொண்டர்கள், பொது மக்கள் ஆதரவு பெருகி வருகிறது என்று முன்னாள் எம்.எல்.ஏ. மலரவன் கூறியுள்ளார்.
காரமடை:

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தொகுதி காரமடையில் முதன் முதலாக ஜெ.தீபா பேரவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் அலுவலகத் திறப்பு விழா நடந்தது.

விழாவிற்கு பொறுப்பாளர்கள் எம்.ஆர் .கோவிந்தராஜ் ,எம்.சுப்பிரமணி, பி.ஜெயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . வி.ஜீவானந்தம் வரவேற்றார் .

விழாவிற்கு முன்னாள் எம்.எல்.ஏ. மலரவன் தலைமை தாங்கி அலுவலகத்தை ரிப்பன் வெட்டிதிறந்து வைத்து பேசினார் .

அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா பொலிடிக்கல் சயின்ஸ் படித்தவர். அவர் நாட்டு மக்களுக்காக பாடுபட போவதாக தெரிவித்துள்ளார்.

தீபாவுக்கு கட்சியின் தொண்டர்கள், பொது மக்கள் ஆதரவு பெருகி வருகிறது. தீபாவை பார்த்து பயந்து தான் உள்ளாட்சி தேர்தலை ஆட்சியாளர்கள் தள்ளி வைத்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் எம்.எல்.ஏ மா.பா.ரோகிணி மற்றும் காரமடை பேரூராட்சி பேரவை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் .

Similar News