செய்திகள்

மானாமதுரையில் ஆபத்தான நிலையில் மின் கம்பங்கள்

Published On 2017-01-27 20:19 IST   |   Update On 2017-01-27 20:19:00 IST
மானாமதுரையில் உள்ள சில பகுதிகளில் செல்லறித்த நிலையில் மின் கம்பங்கள் உள்ளது. ஆபத்தான நிலையில் இருக்கும் இவைகளை உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மானாமதுரை:

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் 20-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் அடி பகுதியில் அரித்துபோய் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. பல மின்கம்பங்கள் நடுபகுதியில் விரிசல் ஏற்பட்டு இரும்பு கம்பிகள் வெளியில் நீட்டிக்கொண்டும் காற்று அடித்தால் சாய்ந்து விழும் நிலையிலும் உள்ளது.

இதேபோல் மானாமதுரை தெ.புதுக்கோட்டை சாலையில உள்ள கண்ணார் தெரு பகுதியில் சாலையில் செல்லும் வாகனங்கள் மீது சாயும் நிலையில் சில மின் கம்பங்களும் செல்லறித்து உள்ளது.

இதேபோல் மானாமதுரை வைகை ஆற்றை பாதையாக பயன்படுத்தப்பட்டு வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். இரவு நேரங்களில் இருட்டிலும் பொதுமக்கள் செல்லும் நிலை உள்ளது. வாரசந்தை மற்றும் ஆனந்தவல்லி கோவில் முன்பும் உயர் மின் கோபுர (ஹைமாஸ்) விளக்கு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News