செய்திகள்

பவானிசாகரில் போலீஸ் நிலையம் பின்புறம் பெண் பிணம் கற்பழித்து கொலையா?: போலீசார் விசாரணை

Published On 2017-01-15 18:41 IST   |   Update On 2017-01-15 18:41:00 IST
பவானிசாகர் போலீஸ் நிலையம் பின்புறம் 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் பிணம் கிடந்தது. இறந்த பெண் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சத்தியமங்கலம்:

பவானிசாகர் போலீஸ் நிலையம் பின்புறம் 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் பிணம் கிடந்தது. இது பற்றி தகவல் கிடைத்ததும் பவானிசாகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அந்த பெண்ணின் கழுத்து நெரிக்கப்பட்டு இருந்தது. மேலும் கால்களை முறித்து உள்ளனர். இதனால் அந்த பெண்ணை 2-க்கும் மேற்பட்டோர் சேர்ந்து அடித்து கொலை செய்து பிணத்தை அங்கேயே போட்டு சென்றிருப்பது தெரிய வருகிறது.

அந்த பெண்ணை கொலையாளிகள் அழைத்து வந்து ஆட்கள் நடமாட்டம் இல்லாத போலீஸ் நிலையத்தின் பின்பகுதி அணைகரையையொட்டி உல்லாசம் அனுபவித்து அதன் பிறகு அவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் அந்த பெண்ணை அந்த ஆசாமிகள் கொலை செய்திருக்க கூடும் என்று கருதப்படுகிறது.

இறந்த கிடந்த பெண் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பெண்ணாக இருக்க கூடும் என்று போலீசார் கருதுகிறார்கள். இந்த சம்பவம் பவானிசாகர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பெண்ணின் உடலை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த மர்ம கொலையில் பவானிசாகர் போலீசார் ஒருவனை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகறார்கள்.

Similar News