செய்திகள்
ஈரோட்டில் தீபா பேரவை ஆலோசனை கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.

யார் மிரட்டலுக்கும் பயப்பட மாட்டோம்: தீபா பேரவை கூட்டத்தில் நிர்வாகிகள் ஆவேசம்

Published On 2017-01-12 05:12 GMT   |   Update On 2017-01-12 05:12 GMT
யார் மிரட்டலுக்கும் பயப்பட மாட்டோம் என்று ஈரோட்டில் நடந்த தீபா பேரவை கூட்டத்தில் நிர்வாகிகள் ஆவேசமாக பேசினர்.
ஈரோடு:

மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவாக ஈரோட்டில் ஏற்கனவே தீபா பெயரில் பேரவை தொடங்கப்பட்டு உள்ளது.

மேலும் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா அ.தி.மு.க. என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கப்பட்டு புதிய கொடி-புதிய சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் ஈரோடு வீரப்பம் பாளையத்தில் நேற்று இரவு எங்கள் அம்மா ஜெயலலிதா-தீபா பேரவையின் ஆலோசனை கூட்டம் ஈரோடு மாவட்ட பொறுப்பாளர் ஸ்ரீதர் தலைமையில் நடந்தது.

இந்த கூட்டத்தில் ஜெயலலிதா தீபா பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு பேசினார்.

சேலத்தில் தொடங்கப்பட்ட எங்கள் அம்மா ஜெயலலிதா தீபா பேரவையின் கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. இதில் ஏராளமான உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர்.

இப்போது இந்த பேரவையின் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நடத்தப்பட்டு புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். தமிழகம் முழுவதும் இதன் கிளைகள் தொடங்கப்பட்டு உறுப்பினர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

ஜெயலலிதாவின் ரத்த சம்பந்தமான தீபாவுக்கு பொதுமக்கள் மற்றும் அ.தி.மு.க.வின் அடிமட்ட தொண்டர்களிடையே ஆதரவு பெருகி வருகிறது. இதனால் எங்களுக்கு மிரட்டல், அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது. இதை கண்டு நாங்கள் பயப்படமாட்டோம்.

ஜெயலலிதாவை போல சவால்களை சமாளிப்பது தீபாவுக்கு சர்க்கரை பொங்கல் சாப்பிடுவது போல தான்.

எனவே தீபா விரைவில் அரசியலுக்கு வரவேண்டும் என்று வலியுறுத்துவதோடு அவர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் மற்றும் முதல் அமைச்சராகவும பொறுப்பேற்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News