செய்திகள்
நாகூரில் தடையை மீறி ஜல்லிக்கட்டு: முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 23 பேர் கைது
நாகூரில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயன்ற முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 23 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்:
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டாக ஜல்லிக்கட்டு உள்ளது. இந்த ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு விலங்கியல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதைதொடர்ந்து அந்த அமைப்பினர் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அதைதொடர்ந்து கடந்த 2007-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது. இது தமிழர்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஆண்டுதோறும் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஜல்லிக்கட்டு நடத்த பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. மேலும், சுப்ரீம் கோர்ட்டில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு மனுதாக்கல் செய்து வருகின்றனர். இருப்பினும் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து வருகின்றது. இந்தநிலையில் நாகூர் புதிய பஸ் நிலையம் பகுதியில் இந்திய தேசியலீக் கட்சி சார்பில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து நாகை துணை போலீஸ் சூப்பிரண்டு அன்பு தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், நடராஜன் உள்பட போலீசார் நாகூர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்தநிலையில் இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் திட்டமிட்டப்படி ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக நாகை மாவட்டம் போலகம், கூத்தாடி தோப்பு பகுதியிலிருந்து காளை மாட்டை ஒரு மினி வேனில் ஏற்றி கொண்டு வந்தனர். நாகூர் பெட்ரோல் நிலையம் அருகே வந்தபோது அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த மினிவேனை மறித்து காளையை சிறைபிடித்தனர்.
அப்போது அங்கு வந்த இந்திய தேசிய லீக் கட்சியினர் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து போலீசார் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயன்ற முன்னாள் எம்.எல்.ஏ. நிஜாமுதீன், இந்திய தேசிய லீக் மாநில தலைவர் அத்தாவுல்லா உள்பட 23 பேரை கைது செய்தனர்.