செய்திகள்

வேதாரண்யம் அருகே பயிர் கருகியதால் மேலும் ஒரு விவசாயி மரணம்

Published On 2017-01-05 11:50 IST   |   Update On 2017-01-05 11:50:00 IST
வேதாரண்யம் அருகே பயிர் கருகியதால் மேலும் ஒரு விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆதனூர் ஊராட்சி கோவில் தாழ்வை சேர்ந்தவர் சிவானந்தம் (55) விவசாயி.

இவர் 2 ஏக்கர் நிலத்தில் நேரடி சம்பா சாகுபடி செய்திருந்தார். பயிர்கள் வளர்ந்து வந்த நிலையில் பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்காமல் பயிர்கள் கருகியது.

இதனால் சிவானந்தம் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்தார்.

இன்று காலை வயலுக் கு சென்ற அவர் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து அவரது உடல் வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் விரைந்து சென்று சிவானந்தம் சாவு குறித்து விசாரித்து வருகின்றனர்.

பயிர் கருகிய கவலையில் உயிரிழந்த விவசாயி சிவானந்தத்துக்கு சுப்புலட்சுமி என்ற மனைவியும் அன்பரசன் என்ற மகனும் உள்ளனர்.

நாகை மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிர் இழந்து உள்ளனர். தற்போது மேலும் ஒரு விவசாயி உயரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News