செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம் 61 அடியாக குறைந்தது

Published On 2016-10-19 03:57 GMT   |   Update On 2016-10-19 03:57 GMT
நேற்று 62.59 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 61.41 கன அடியானது.
மேட்டூர்:

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த சில நாட்களுக்கு முன்பு முழுவதும் நிறுத்தப்பட்டது.

இதற்கிடையே காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து இருந்தது.

இந்தநிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழையும் குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்தது.

நேற்று 2278 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 2142 கன அடியானது. நேற்று 62.59 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 61.41 கன அடியானது.

அணையில் இருந்து 12 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் அணையின் நீர்மட்டம் ஒரு நாளைக்கு ஒரு அடிக்கு மேல் வேகமாக சரிந்து வருகிறது.

சுப்ரீம் கோர்ட் உத்தரவு படி கர்நாடக அணைகளில் இருந்து மீண்டும் வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீரை திறந்து விட்டாலோ, அல்லது மழை பெய்தாலோ ? தான் மேட்டூர் அணைக்கு இனி வரும் காலங்களில் கூடுதல் தண்ணீர் வர வாய்ப்பு உள்ளது.

Similar News