செய்திகள்
இளையான்குடி அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை
இளையான்குடி அருகே ஆடு மேய்ப்பதில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள இரும்பூரை சேர்ந்தவர் சின்னக்கண்ணு என்ற சீதாராமன் (வயது53). ஆடுகள் மேய்க்கும் தொழில் செய்து வந்தார்.
இவருக்கும் அதே ஊரை சேர்ந்த கோவிந்தன் மகன் சொக்கையா (30) என்பவருக்கும் ஆடு மேய்ப்பதில் தகராறு இருந்து வந்துள்ளது.
நேற்று மாலையில் இருவரும் இரும்பூர் கண்மாய் பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த சொக்கையா அரிவாளால் சீதாராமனை சரமாரியாக வெட்டினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் பலியானார்.
இந்த சம்பவம் குறித்து இளையான்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.