செய்திகள்

வருகிற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி நீடிப்பது சந்தேகம்: ப.சிதம்பரம்

Published On 2016-08-14 12:34 IST   |   Update On 2016-08-14 12:34:00 IST
வருகிற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி நீடிப்பது சந்தேகமே என முன்னாள் மத்திய மந்திரி பா.சிதம்பரம் கூறியுள்ளார்.
காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ளாட்சி தேர்தல் குறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசியதாவது:-

மக்களிடம் அதிக தொடர்பு உள்ளவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மட்டுமே. எனவே நாம் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை விட உள்ளாட்சி தேர்தலில் அதிக பிரதிநிதிகளை பெற வேண்டும்.

வருகிற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி நீடிப்பது சந்தேகமாக உள்ளது. தமிழக சட்டசபையில் திட்டங்களை யார் கொண்டு வந்தது என்பது குறித்து மட்டுமே விவாதம் செய்கிறார்கள். தமிழக அரசு அறிவித்துள்ள பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கிய பிறகுதான் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று நினைக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் ராமசாமி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரம், மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவர் மாங்குடி உள்பட பலர் கலந்து கொண்டனர்

Similar News