செய்திகள்

புதுக்கோட்டை அருகே தந்தையை கொன்ற மகன்

Published On 2016-07-30 11:09 IST   |   Update On 2016-07-30 11:09:00 IST
புதுக்கோட்டை அருகே தலையில் கல்லை போட்டு தந்தையை மகன் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமயம்:

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பொன்னமராவதி திருக்களம்பூர் பகுதியை சேர்ந்தவர் ராமசந்திரன் (வயது 52). கூலி தொழிலாளி. இவரது மகன் பிரபாகரன் (20).

இந்நிலையில் தந்தை – மகன் இடையே கடந்த சில நாட்களாக தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்றிரவும் தகராறு ஏற்பட்டது. பின்னர் ராமச்சந்திரன்தூங்க சென்று விட்டார். இன்று அதிகாலை திடீரென எழுந்த பிரபாகரன் , தூங்கி கொண்டிருந்த ராமசந்திரனை கட்டையால் தாக்கினார். மேலும் தலையில் கல்லை தூக்கி போட்டார். இதில் ராமச்சந்திரன் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து பிரபாகரன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

இது குறித்த தகவல் அறிந்ததும் பொன்ன மராவதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென் றனர். பின்னர் ராமச்சந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

குடும்ப தகராறில் பிரபாகரன் தந்தையை கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது. இது தொடர் பாக போலீசார் விசாரணை நடத்தி தப்பியோடிய பிரபாகரனை தேடி வருகின்றனர். தந்தையை மகன் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News