செய்திகள்

மயிலாடுதுறையில் என்ஜினீயர் வீட்டின் பூட்டை உடைத்து 77 பவுன் நகை - பணம் கொள்ளை

Published On 2016-07-28 15:03 IST   |   Update On 2016-07-28 15:03:00 IST
மயிலாடுதுறையில் என்ஜினீயர் வீட்டின் கதவை உடைத்து 77 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை:

மயிலாடுதுறை சீனிவாசபுரம் காந்திஜி தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது50). கட்டிட பொறியாளர். இவரது மனைவி ரேவதி (45). பூம்புகாரில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியை.

நேற்று இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். பின்னர் சுந்தரமூர்த்தி மதியம் வீட்டிற்கு வந்தார். அப்போது கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது மர்மநபர்கள் 3 பீரோக்களை உடைத்து 77 பவுன் நகைகள், 1 லட்சத்து 15 ஆயிரம் ரொக்கம், 1 கிலோ வெள்ளி பாத்திரங்கள் ஆகியவற்றை கொள்ளை அடித்து சென்றிருப்பது தெரியவந்தழது.

இதுகுறித்து சுந்தரமூர்த்தி மயிலாடுதுறை போலீசில் புகார் அளித்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். நாகையிலிருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொண்டனர்.

கடந்த சில நாட்களாக இப்பகுதியில் அடிக்கடி வீடு மற்றும் கடைகளில் திருட்டு சம்பவங்கள் நடந்து வருவதாகவும், பொதுமக்கள், வியாபாரிகள் அச்சத்துடன் இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Similar News